திருப்பரங்குன்றம் பெருங்குடியில் உள்ள சரஸ்வதி நாராயணன் கல்லூரியில் 59 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது இந்த பட்டமளிப்பு விழாவில் 20 21 முதல் 2022 வரை பயின்ற 463 மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினர்

இதில் 69 மாணவ மாணவிகள் முதுகலை பட்டமும் 394 இளங்கலை பட்டமும் வழங்கப்பட்டது. இதில் முக்கிய விருந்தினராக ISRO அமைப்பின் இணை இயக்குநர் வெங்கட்ராமன் தலைமை வகித்து மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.
கல்லூரி நிர்வாக இயக்குனர் நாராயணன் மற்றும் கல்லூரி முதல்வர் சந்திரன் மற்றும் அனைத்து பேராசிரியர்கள் பங்கேற்றனர்.
மாணவ மாணவிகள் தங்கள் பெற்றோருடன் வந்து பட்டங்களை வாங்கி சென்று மகிழ்ந்தனர்

இதில் பேசிய ISRO செயலாளர் வெங்கட்ரமணன் அனைத்து மாணவ மாணவிகளும் அறிவியல் சார்ந்த படிப்புகளை மேற்கொண்டு படித்து வர வேண்டும் ஏனென்றால் நீங்கள் வரவுள்ள காலங்களில் அறிவியல் சார்ந்த அனைத்து துறைகளும் எந்த வேலை எடுத்தாலும் தொழில்நுட்ப உதவியுடன் அதை மாறுபட்ட கோணத்தில் மிகவும் உயரிய கோணத்தில் செயல்பட வேண்டும்..
என்பதே அறிவியலின் நோக்கமாகும் எனவே அறிவியல் சார்ந்த கல்விகளை மாணவ மாணவிகள் கற்க வேண்டும் மேலும் அறிவியல் ஆராய்ச்சிகளில் ஈடுபடும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் பழங்காலத்தை போல் போர்களில் ஈடுபடுவது போல் மனித உயிர்கள் பலியாவது கிடையாது.
எதிரிகளை இருக்கும் இடத்தை துல்லியமாக அறிந்து டிரோன் மூலமும் ஏவுகணைகள் மூலம் தாக்கும் தொழில்நுட்ப போர்முனைக்கு வந்துள்ளோம்.
இதுவரை நீங்கள் கடந்து வந்த பாதை வேறு இனி உள்ள பாதைகள் உங்களுக்கு சவாலானது.
தோல்விகளை கண்டு துவளாதீர்கள். தோல்விதான் அடுத்த வெற்றிக்கு முதல் படி ஒரு முறை தோல்வி கண்டால் அடுத்த முறை தோல்வி வராது. முதன் முதலில் 1979இல் எஸ்எல்வி ராக்கெட் செலுத்தும் போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக தோல்வியடைந்தோம். ஆனால் அடுத்த வருடமே தொழில்நுட்ப கோளாறு சீரமைத்து முதன் முதலில் எஸ்.எல்.பி ராக்கெட் 3 எண்ணில் செலுத்தினோம் என்பது குறிப்பிடத்தக்கது
என்று இஸ்ரோ முன்னாள் இணை இயக்குனர் வெங்கட்ராமன் கூறினார்.