• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..,

BySeenu

Apr 5, 2026

கோவை பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியின் 2026ம் ஆண்டிற்கான பட்டமளிப்பு விழா, கல்லூரி வளாகத்தில் உள்ள ஜி.ஆர்.ஜி நூற்றாண்டு விளையாட்டு அரங்கம் மற்றும் பி.எஸ்.ஜி.ஆர்.கே.சி முன்னாள் மாணவர் பொன்விழா அரங்கில் நடைபெற்றது.

விழா நான்கு அமர்வுகளாக நடைபெற்றது. விழாவில் கல்வி, தொழில் மற்றும் அரசுத் துறையைச் சேர்ந்த நான்கு முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டு மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கி உரையாற்றினார்.

குஜராத்தில் உள்ள பண்டிட் தீனதயாள் எரிசக்தி பல்கலைக்கழகத்தின் தலைமை இயக்குநர் டாக்டர் எஸ். சுந்தர் மனோகரன் முதுகலைப் பட்டதாரி மாணவிகளுக்கான காலை அமர்வில் தலைமை தாங்கி பட்டங்களை வழங்கினார். இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் மூத்த விஞ்ஞானி டாக்டர் ரஞ்சித் கிருஷ்ண பாய், அடிப்படை அறிவியல், சமூக அறிவியல், மானுடவியல் மற்றும் பி.வோக். மாணவர்களிடையே உரையாற்றினார்.

கனடாவின் ஆக்சென்சர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கலா சுரேஷ்,கணக்கீட்டு அறிவியல் மற்றும் மேலாண்மை குறித்த அமர்வில் தலைமை விருந்தினராகப் பங்கேற்று பேசினார். கோயம்புத்தூர் சக்தி குழுமத்தின் தலைமை மனிதவள அலுவலர் சீனிவாஸ் எஸ். சாஸ்திரி வணிகவியல் பட்டதாரிகளிடையே உரையாற்றினார்.