நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள பழங்குடியினர் கிராமத்தில் (5) சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பட்டதாரி வாலிபர் கைது செய்யப்பட்டனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ளது கொலக்கம்பை அருகே உள்ள நெடுகல்கம்பை ஆதிவாசி கிராமத்தில் பெட்டிக்கடை நடத்தி வந்தவர் உமேஸ்வரன் 25. இவர் இவரது கடைக்கு மிட்டாய் வாங்கவும், செல்போன் ரீசார்ஜ் செய்யவும் மாணவிகள் வரும் பொழுது அவர்களது செல்போன் எண்களை வாங்கி வைத்துக்கொண்டு செல்போன் மூலம் ஆசை வார்த்தைகள் கூறி, ஐந்து மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் உமேஸ்வரன். ஏற்கனவே திருமணம் ஆனதை மாணவிகளிடம் மறைத்து மாறி, மாறி மாணவிகளையும் பலமுறை தொந்தரவு செய்துள்ளார். ஒரு கட்டத்தில் உமேஸ்வரனின் சுயரூபம் மாணவிகளுக்கு தெரிய வர மாணவிகள் குழந்தைகள் நல பாதுகாப்பு துறையின் 1099 என்ற இலவச எண்ணில் தொடர்பு கொண்டு, நடந்தவற்றை குழந்தைகள் நல பாதுகாப்பு துறை அதிகாரி சோபனாவிடம் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து குழந்தைகள் நல பாதுகாப்பு துறை அதிகாரி சோபனா சம்பவம் நடந்த பழங்குடியின கிராமத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டதில். உண்மை என தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து குழந்தைகள் நல பாதுகாப்புத்துறை அதிகாரி சோபனா குன்னூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மகாலட்சுமி (பொறுப்பு)வழக்கு பதிவு செய்து உமேஸ்வரனை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி குன்னூர் கிளை சிறையில் அடைத்தனர். பழங்குடியின கிராமத்தில் பட்டதாரி வாலிபர் ஐந்து மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பில் ஏற்படுத்தி உள்ளது.