• Sun. May 5th, 2024

மதுரையில் அரசு பேருந்து மோதி, நான்கு பயணிகளுக்கு காயம்.., போக்குவரத்து பாதிப்பு…

ByKalamegam Viswanathan

Jan 20, 2024

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிருந்து எல்லிஸ் நகர் பார்க்கிங் பஸ் ஸ்டாப்பிக்கு அரசு பேருந்து மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு வந்த 40 க்கும் மேற்ப்பட்ட வட மாநிலத்தை சேர்ந்த பயணிகளை ஏற்றி வரும் பொழுது, எல்லிஸ் நகர் பாலத்திலிருந்து இறங்கும் போது, ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதினார். இதனால் பயணிகள் நான்கு பேர் காயம் ஏற்பட்டது. மேலும் அங்கிருந்த பொதுமக்கள் போக்குவரத்து காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவம் அறிந்த காரிமோடு போக்குவரத்து காவல்துறை சார்பு ஆய்வார் தார்ச்சூஸ் சம்பவ இடத்திற்கு வந்து தடுப்பு சுவரில் மேதிய பேருந்தில் காயம் ஏற்ப்பட்ட பயணிகளை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு ராஜஜீ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். பின்பு அரசு போக்குவரத்து கழகம் சார்பில், விபத்து ஏற்பட்ட அரசு பேருந்தை மீட்பு வாகத்தின் மூலம் மீட்டனர். இதனால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும், இரவு நேரங்களில் அடிக்கடி தடுப்புச் சுவரில் மோதி விபத்து ஏற்படுகிறது என்றும் தடுப்புச் சுவரில் ஒளிரும் விளக்கு இல்லாத காரணத்தினால் இந்த விபத்து ஏற்படுவதாக சமூக ஆர்வலர் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *