• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

வாரிசு’ மற்றும் ‘துணிவு’ சிறப்புக் காட்சிகளுக்கு அரசு தடை..!

ByA.Tamilselvan

Jan 10, 2023

‘வாரிசு’ மற்றும் ‘துணிவு’ படங்களுக்கு ஜனவரி 13-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை அதிகாலை சிறப்புக் காட்சிகளுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சினிமா மற்றும் நீர்ப்பாசனத்துறை இணை ஆணையர் செந்தாமரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஜனவரி 13, 14, 15 மற்றும் 16-ம் தேதிகளில் விஜய்யின் ‘வாரிசு’, அஜித்தின் ‘துணிவு’ படங்களை அதிகாலை 4 மணி மற்றும் 5 மணிக்கு சிறப்புக் காட்சிகளாக வெளியிட தடை விதிக்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும். திரையரங்கு நுழைவு வாயில்களில் ரசிகர்கள் தங்கள் நாயகர்களுக்கு பேனர் கட் அவுட் வைத்து, அதற்கு பாலாபிஷேகம் செய்ய அனுமதியளிக்கக் கூடாது. டிக்கெட்டுகளின் பின்புறம் திரையரங்குகளில் ஏதேனும் பிரச்சினை தொடர்பான புகாருக்கான உயரதிகாரியின் பெயர், செல் நம்பர், இமெயில் முகவரி அச்சிடப்பட்டிருக்க வேண்டும். அரசு நிர்ணயத்தை கட்டணத்தை விட அதிகமான டிக்கெட் கட்டணம், பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்பட்டால் புகார் அளிக்கலாம். உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.