• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

கோவிந்தா “கோஷம் முழங்கிட மதுரை வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்

Byp Kumar

May 5, 2023

மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழா இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு “கோவிந்தா” கோஷம் முழங்கிட சுவாமி தரிசனம் செய்தனர்.
மதுரையில் பிரசித்தி பெற்ற அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில் சித்திரை திருவிழா கடந்த மே 20ம் தேதி துவங்கி நடைபெற்று வந்த நிலையில்முக்கிய விழாவான வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவம் இன்றுநடைபெற்றது.


இதையொட்டி கண்டாங்கி பட்டு உடுத்தி, கையில் நேரிக்கம்புடன் கள்ளழகர் திருக்கோலத்தில், தங்கப் பல்லக்கில் அழகர்கோயிலில் இருந்து புறப்பட்ட கள்ளழகர் வழிநெடுகிலும் உள்ள மண்டகப்படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாளித்தார்.தொடர்ந்து, மதுரை மூன்றுமாவடி, தல்லாகுளம் ஆகிய பகுதிகளில் கள்ளழகரை பக்தர்கள் எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவையும், நேற்று இரவு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் திருமஞ்சனமும் நடைபெற்றது.
இதனையடுத்து, இன்று அதிகாலை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையை ஏற்றுக் கொண்டு, தங்க குதிரை வாகனத்தில் கள்ளழகர், தல்லாகுளம் கருப்பண சுவாமி சன்னதி எதிரில் வெட்டிவேர் மற்றும் ஆயிரம் பொன் சப்பரங்களில் எழுந்தருளிதை தொடர்ந்து பக்தர்கள் புடைசூல், வந்தடைந்தார். கோவிந்தா கோஷம் விண்ணை முட்ட வைகை கரையில் அங்கு கள்ளழகரை வீரராகவப் பெருமாள் எதிர்கொண்டு வரவேற்க தங்கக்குதிரையில் கள்ளழகர் வைகை கோலாகலமாக நடைபெற்றது. அழகர் ஆற்றில் இறங்கும் விழா வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் நேற்று இரவே தல்லாகுளம் முதல் வைகை ஆறு வரை திரண்டு நின்றனர்.அதனை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பொதுமக்களுக்கு நீர் மோர் மற்றும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது இந்த அன்னதானத்தினை ஆரப்பாளையம் குரு தியேட்டர் பகுதியில் அமைந்துள்ளஸ்ரீகள்ளழகர் ஆட்டோநிலையம் தலைவர் துணைத்தலைவர் செந்தில் ரஜினிகாந்த், ஆகியோர் தலைமையில் சிறப்பு அழைப்பாளர்களாக சோலைராஜா இளவரசன் ஆகியோர் கலந்து கொண்டு நீர்மோர் அறுசுவை உணவுகள் வழங்கி துவங்கி வைத்தனர் இந்த அன்னதானத்தில் ஸ்ரீகள்ளழகர் ஆட்டோநிலையம் சிவபாண்டி மற்றும் உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு அறுசுவை உணவுகளை வாங்கிச் சென்றனர்