• Fri. Mar 27th, 2026
WhatsAppImage2026-03-25at0556534
previous arrow
next arrow
Read Now

பேராவூரணி அதிமுக வேட்பாளராக கோவி.இளங்கோவன்..,

Byமுகமதி

Mar 27, 2026

தமிழ்நாடு அரசியல் புதிய பரிணாமம் நோக்கி நகர்கின்ற இந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடியார் பேராவூரணி தொகுதியின் வேட்பாளராக களம் இறக்கி இருக்கிறார்.

மென்பொருள் துறையில் மேலைநாட்டு அனுபவமும் ஊடகத்துறையில் உண்மையை உரக்கச் சொன்ன துணிவும், நெஞ்சில் லட்சியமும் கொண்ட நம் மண்ணின் மைந்தன்!
கழகத்தின் விசுவாசியாக… மாணவர் அணி முதல் ஒன்றிய செயலாளர் வரை மக்களின் உரிமைகளுக்காக களம் கண்டவர்..

முன்னாள் சட்டமன்ற உறுப்பினரின் மகனாக அறிமுகமாகி இன்று தொகுதி மக்களின் செல்ல பிள்ளையாக வளம் வருபவர்.
இவர் 1984 பேராவூரணியின் ஒரு சாமானிய விவசாய குடும்பத்தில் வேர் விட்டு வளர்ந்தவர்.

இவர் ஒரு B.tech பட்டதாரி சென்னை, பெங்களூரு, சிங்கப்பூர் என மென்பொருள் துறையில் software developer ராக பணியாற்றி உலகத் தரம் வாய்ந்த அனுபவம் இருந்ததால் அதில் பல முன்னேற்றங்களைக் கண்டவர்.

தமிழ் மீதும் தமிழீழத்தின் மீதும் கொண்ட பற்றால் ஊடகத்துறையில் களம் கண்டார், குரல் தொலைக்காட்சியின் செய்தியாளராக உண்மைகளை உரக்கச் சொன்னவர் குறிப்பாக ஈழத் தமிழர் இனப்படுகொலையின் போது திமுகவின் இரட்டை வேடத்தை தன் எழுத்தாலும், நேர்காணல்களாலும் தோலுரித்துக் காட்டியவர்.

அரசியல் பாரம்பரியம் கழகத்தின் மீது இவர் கொண்ட பற்று இன்று நேற்று வந்ததல்ல பல தசாப்தங்களாக எம்ஜிஆர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் விசுவாசத்தோடு பணியாற்றிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மா. கோவிந்தராசு அவர்களின் மகன். மாணவர் அணி இணைச் செயலாளர் முதல் ஒன்றிய செயலாளர் வரை கழகப் பணியில் இவரது ஒவ்வொரு அடியும் ஒரு மைல்கல்.

பதவிக்காகக் காத்திருக்காமல் மக்கள் பிரச்சினை என்றால் முதல் ஆளாக வந்து நிற்கும் போர்க்குணம் கொண்டவர். பேராவூரணியின் உரிமைக்கான ஒவ்வொரு போராட்டங்களிலும் முன் நின்றவர். தனது தந்தையார் காலத்தில் பேராவூரணிக்கு கொண்டுவந்த எண்ணற்ற ஆக்கப் பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு அதிமுக அரசின் திட்டங்கள் கடைக்கோடி மனிதருக்கும் சென்று சேர பாலமாக இருந்தவர்.

பேராவூரணி கண்ணீர் சிந்திய நேரங்களில் கண் இமைப்போல நின்றவர். கஜா புயல் ஊரையே புரட்டி போட்ட போது வீதியில் இறங்கி சீரமைப்பு பணிகளைச் செய்தவர். கொரோனா காலத்தில் தனது சொந்தப் பணத்தில் மக்களின் துயர் துடைக்க துணை நின்றவர். மழை, வெள்ளம், புயல் போன்ற இயற்கைப் பேரிடர் முதல் தீ விபத்துக்கள் வரை மக்கள் எதிர்கொண்ட ஒவ்வொரு சிரமத்திலும் முதலில் சென்று உதவி செய்தவர்…
கல்வி உதவிகள் இருந்து ஏழை மாணவர்கள் எதிர்காலத்தை கட்டி எழுப்பும் முயற்சிகள் வரை தொடர்ந்து உழைத்தவர்.

சேவை,நேர்மை மற்றும் உறுதி ஆகிய மூன்று தூண்களை அடிப்படையாகக் கொண்டு இந்த முறை சட்டமன்றத்தில் உங்கள் குரலாக நிற்கத் தயாராக உள்ளார்.