• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஆளுநர் ஆர்.என்.ரவி!

ByP.Kavitha Kumar

Mar 1, 2025

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழில் வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளார்.

திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது 72-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இதனையொட்டி அவருக்கு பல்வேறு கட்சி தலைவர்கள், நடிகர், நடிகைகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி விடுத்துள்ள வாழ்த்து செய்தியில். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் நீண்ட ஆயுளும், ஆரோக்கியமும் பெற வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார். இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் விடுத்துள்ள பதிவில், தமிழக முதல்வர் ஸ்டாலின் நீண்ட ஆயுளுடன் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துவதாக தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதம் அனுப்பியுள்ளார். அதில், இன்று தங்களுடைய 72ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுவதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். தங்களுடைய தலைமையின் கீழ் தமிழ்நாட்டு மக்கள் எல்லா நலன்களையும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகிறேன். மேலும், எல்லாம் வல்ல இறைவன் அருளால் தாங்கள் பூரண உடல் ஆரோக்கியத்துடனும், சந்தோஷத்துடம் தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை ஆற்றிடவும் இந்நன்நாளில் தங்களை வாழ்த்துகிறேன் ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.