

தமிழக அமைச்சரவையிலிருந்து செந்தில்பாலாஜியை நீக்கி ஆளுநர் ரவி உத்தரவிட்டுள்ளார். பல வழக்குகள் அவர்மீது உள்ளது என ஆளுநர் குறிப்பிட்டிருக்கிறார். அந்த வழக்குகளை செந்தில்பாலாஜி எதிர்கொண்டு வருகிறார். அமைச்சரவையில் நீடித்தால் விசாரணை பாதிக்கப்படும் எனவும், ஆளுநர் தெரிவித்திருக்கிறார். இது குறித்து முதல்வர் ஸ்டாலின்.., அமைச்சரவையிலிருந்து செந்தில்பாலாஜியை நீக்க ஆளுநருக்கு அதிகாரமில்லை, ஆளுநர் நடவடிக்கைளை திமுக அரசு சட்டரீதியாக எதிர்கொள்ளும் என்று துணிச்சலாக பதிலடி கொடுத்திருக்கிறார்.
