லெனின் பொதுச் செயலாளர் கருவூல ஊழியர்கள் பாதுகாப்பாக பணியாற்றுவதற்கு உகந்த சூழ்நிலையை தமிழக அரசு உருவாக்க வேண்டும்.
கருவூலத்தில் சர்வரில் ஏதாவது கோளாறு ஏற்பட்டு நிதி விடுவிப்பதில் தாமதம் என்றால் கருவூல ஊழியர்களை சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு உள்ளாக்கும். அரசாணை 286 உடனடியாக அரசு ரத்து செய்ய வேண்டும். இல்லை என்றால் விரைவில் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
புதுக்கோட்டையில் தமிழ்நாடு கருவூல மற்றும் கணக்கு துறை அலுவலர் சங்கம் மாநில பொதுச் செயலாளர் லெனின் பேட்டி..,
புதுக்கோட்டையில் தமிழ்நாடு கருவூலம் மற்றும் கணக்கு துறை அலுவலர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் மாநில தலைவர் ஜெகன் மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுச் செயலாளர் லெனின் உள்ளிட்ட மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கருவூலத்தில் உள்ள காலி பணி இடங்களை நிரப்ப வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து தாலுகாவிலும் புதிய சாரநிலை கருவூலங்கள் உருவாக்க வேண்டும்.
அனைத்து நிலையில் ஆன பதவி உயர்வுகளையும் உரிய காலத்தில் வழங்க வேண்டும். அரசாணை 286-யை வைத்து அச்சுறுத்தல் செய்யும் போக்கினை கண்டிப்பதோடு, இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநில பொதுச் செயலாளர் லெனின், கருவூல துறையில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். புதிதாக உருவாக்கப்பட்ட ஐஎஃப்சி திட்டத்தில் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும். முழுமையாக கருவூல ஊழியர்களை இந்த திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்க வேண்டும்.
தமிழகத்தில் 79 தாலுகாக்களில் அரசு கருவூலங்கள் திறக்கப்படாமல் உள்ளது. உடனடியாக அனைத்து தாலுகாவிலும் அரசு கருவூலங்கள் திறக்கப்பட வேண்டும்.
ஊழியர்கள் பாதுகாப்பாக பணியாற்றுவதற்கான சூழ்நிலையை உருவாக்க வேண்டும். கருவூல ஊழியர்களை கடுமையாக பாதிக்கும் 286 அரசாணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். ஏனென்றால் சர்வரில் ஏதாவது கோளாறு ஏற்பட்டு நிதிகளை விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டால் அதற்கு பொறுப்பு கருவூல ஊழியர்கள் தான் என்று கூறி, அவர்களை சஸ்பெண்ட் செய்யும் நடவடிக்கையும், இந்த அரசாணையில் எடுக்கப்பட்டு வருகிறது. எனவே இந்த அரசாணையை உடனடியாக அரசு ரத்து செய்ய வேண்டும்.

இந்த கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்றாவிட்டால் அடுத்த கட்டமாக விரைவில் போராட்டங்கள் நடத்தப்படும் என்று கூறினார்.