அரியலுார் ஒன்றியம், நாகமங்கலம் ஊராட்சி, அரசு மேல்நிலைப்பள்ளியில் செயல்வழி கற்றலை ஊக்குவிக்கும் வகையில் சந்தை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பான பயிற்சி மாணவ மாணவியர்களுக்கு அளிக்கப்பட்டது .

அதன் அடிப்படையில் உள்ளூர் பொருட்களை சந்தைப்படுத்தும் செயல்பாடு பற்றிய கண்காட்சியில் பள்ளி நடந்தது. அதில் மாணவ மாணவியர்கள் வீட்டில் விளைவித்த காய்கறி, கீரை வகைகள், எலுமிச்சை , திராட்சை போன்ற பழ வகைகள் மற்றும் சிறுதானியங்களில் செய்த கெட்டி உருண்டை போன்ற பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தனர். ஆசிரியர்களும் மாணவர்களும் அவர்களிடம் பொருட்களை காசு கொடுத்து பெற்றுக் கொண்டனர்.

பள்ளியின் சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களான செல்வராணி, தமிழ் இலக்கியா மற்றும் சாமியம்மாள் ஆகியோர் நிகழ்வை ஒருங்கிணைத்திருந்தனர். முன்னதாக பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெயராஜ் விற்பனையை தொடங்கி வைத்தார்.






