

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கணூர் கிராமத்தில் அமைந்துள்ள ஜக்கம்மாள் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜமீன் காலம் தொட்டு ஜல்லிக்கட்டு போட்டி வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது.,
இந்த ஆண்டு ஜக்கம்மாள் கோவிலை 400 ஆண்டுக்கு பின் புரணமைப்பு செய்து ஜக்கம்மாள் கோவில் கும்பாபிஷேக விழாவையும், ஜல்லிக்கட்டு போட்டியையும் நடத்த திட்டமிட்டு வரும் பிப்ரவரி 11ஆம் தேதி ஜக்கம்மாள் கோவில் கும்பாபிஷேக விழாவும், 12ஆம் தேதி பழமை மாறாமல் ஜல்லிக்கட்டு போட்டியும் நடைபெற உள்ளது.

இந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்னேற்பாடுகளை இன்று உசிலம்பட்டி கோட்டாச்சியர் ரவிச்சந்திரன், காவல் துணைக் கண்காணிப்பாளர் நல்லு மற்றும் வட்டாச்சியர் சுரேஷ் தலைமையிலான அரசு அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.
ஜல்லிக்கட்டுக்காக அமைக்கப்பட்ட உள்ள காளைகள் வாகனங்களில் கொண்டு வருவதற்கான பாதைகள், காளைகள் பரிசோதனை மையம் மற்றும் மாடுபிடு வீரர்கள் பரிசோதனை மையம், காயமடைந்தவர்களுக்கான சிகிச்சை மையம் உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்தனர்., தொடர்ந்து அரசின் வழிகாட்டுதலில் அடிப்படையில் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் மற்றும் பணிகளை மேற்கொள்ளுமாறு விழா குழுவினருக்கு அரசு அதிகாரிகள் அறிவுரை வழங்கினர்.

