• Wed. Oct 8th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

அரசு மின்துறை பொறியாளரை வீடியோ எடுத்து வைத்து மிரட்டல்

ByB. Sakthivel

Apr 26, 2025

புதுச்சேரியில் அழகிகளுடன் உல்லாசமாக இருந்த அரசு மின்துறை பொறியாளரை நிர்வானமாக வீடியோ எடுத்து வைத்து மிரட்டல் விடுத்தனர்.

பை ஒன் கெட் ஒன் ஆஃபர் எனக்கூறி ரூ. 6 லட்சம் வரை பணம் பறித்த ரவுடி, அவரது மனைவி உட்பட ஐந்து பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அப்பாவி போல் நடித்த கள்ளக்காதலி தான் மோசடிக்கு மூளையாக செயல்பட்டது தெரியவந்தது.

புதுச்சேரி நகர பகுதியில் வசிப்பவர் பன்னீர் செல்வம் மின்துறை இளநிலை பொறியாளராக உள்ளார். இவருக்கும் அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த மணிமேகலை என்கிற பெண்ணுக்கும் நீண்ட நாட்களாக திருமணத்தை மீறிய தொடர்பு இருந்துள்ளது, அதனால் அவர் அப்பெண்ணுக்கு அவ்வப்போது பணம் கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மனிமேகலை தனது தோழிகளான சுலோக்‌ஷனா மற்றும் சுகந்தி ஆகியோரை அறிமுகம் செய்து வைப்பதாகவும், இதில் சுகந்தி உடன் உல்லாசமாக இருக்கலாம் என ஆசை வார்த்தை கூறி, பன்னீர்செல்வத்தை ரெட்டியார்பாளையம் புதுநகரில் உள்ள சுலோக்‌ஷனா வீட்டுக்கு அழைத்து சென்று அவரை வீட்டிற்க்குள் அனுப்பி வைத்து அவர் சென்று விட்டார். இதனையடுத்து சுகந்தி உடன் பன்னீர்செல்வம் உல்லாசமாக இருந்த பொழுது அவரை நிர்வான நிலையில் வீட்டின் கீழ் தளத்தில் இருந்த சுலோக்‌ஷனா, அவரது கணவர் தீனதயாளன் உள்ளிட்ட கும்பல் மறைந்திருந்து வீடியோ எடுத்து வைத்து கொண்டு பன்னீர்செல்வத்தை தாக்கி மிரட்டி, முதற்கட்டமாக ஜிபே மூலமாக ரூ. 1 லட்சமும் பின்னர், அவரது வீட்டிற்கு சென்று மேலும் ரூ. 3 லட்சமும் பெற்று சென்றுள்ளனர். பின்னர் இது குறித்து பன்னீர்செல்வம் தனது கள்ளக் காதலியான மணிமேகலை உடன் முறையிட்டுள்ளார், அதற்கு அப்பாவி போல் நடித்த மணிமேகலை இனி அவர்கள் உங்களிடம் வர மாட்டார்கள், அந்த நிர்வான வீடியோவையும் டெலிட் செய்ய கூறி விடுகிறேன். அதற்கு தன்னிடம் ரூ. 2 லட்சம் தாருங்கள் பிரச்சனை சரியாகிவிடும் என கூறியுள்ளார், இதனை நம்பிய பன்னீர்செல்வம் மணிமேகலைக்கு ரூ. 2 லட்சம் பணம் கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து கடந்த திங்கட்கிழமை அன்று ரவுடியான தீனதயாளன் பன்னீர்செல்வத்திற்க்கு போஃன் செய்து வழக்கு செலவுக்கு ரூ. 5 லட்சம் உடனடியாக வேண்டும் என்றும், தனது மனைவி சுலோக்‌ஷனாவை வீட்டுக்கு அனுப்பி வைப்பதாகவும், அப்படி தரவில்லை என்றால் நிர்வான வீடியோவை குடும்பத்தினருக்கு அனுப்புவதாக மிரட்டி உள்ளார்.

இதில் மன உளைச்சல் அடைந்த பன்னீர்செல்வம் செய்வதறியாமல் தனது மனைவியிடம் நடந்தவற்றை கூற இருவரும் ஒதியஞ்சாலை காவல் நிலையத்திற்க்கு தகவல் தெரிவிக்க அவர்கள் பன்னீர்செல்வம் வீட்டை சுற்றி மாறுவேடத்தில் இருந்தனர். இதனிடையே பணம் பெற சுலோக்‌ஷனா பன்னீர்செல்வத்தின் வீட்டுக்கு வர, மறைந்திருந்த போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்ததில், தனது தோழி மணிமேகலை பன்னீர்செல்வத்திடம் நிறைய பணம் உள்ளதாகவும் அதில் ரு 20 லட்சம் வரை மிரட்டி வாங்கி கொள்ளாலாம் என திட்டம் தீட்டி இச்செயலில் ஈடுப்பட்டதாகவும், இதற்காக தனது கணவர் தீனதயாளன், அவருடைய நண்பர்களான பிரபல ரவுடிகள் ரங்கராஜ் @ புளியங்கொட்டை மற்றும் ஷாருகானை வைத்து இத்திட்டத்தை செயல்படுத்தியதாக தெரிவித்தார்

இதனையடுத்து சம்பவம் நடந்தது ரெட்டியார்பாளையம் காவல் நிலைய சரகம் என்பதால் வழக்கை அங்கு மாற்றம் செய்த போலீசார், மணிமேகலை, சுகந்தி, சுலோக்ஷனா, தீனதயாளன் மற்றும் ஷாருகான் ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து ரூ. 3 லட்சம் பணத்தை பறிமுதல் செய்து, கைது செய்யப்பட்ட ஐந்து பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி காலாபட்டு மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள பிரபல ரவுடி ரங்கராஜை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.