மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே கட்ட புலி நகர் பகுதியில் முன்னாள் சென்ற காரை முந்தி செல்ல முயன்ற நிலையில் காரும் அரசு பேருந்தும் தலை குப்புற கவிழ்ந்து விபத்து 10 க்கும் மேற்பட்டோர் காயம்பட்ட நிலையில் அனைவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பு போலீசார் விசாரணை

நேற்று இதே இடத்தில் மதுரை ஆரப்பாளையத்தில் இருந்து பழனி சென்ற அரசு பேருந்தின் பின்பக்க டயர் கழன்று விழுந்ததில் 15 க்கு மேற்பட்ட பயணிகள் காயம் பட்ட நிலையில் அதே இடத்தில் மீண்டும் விபத்து ஏற்பட்டதால் பொதுமக்கள் பயணிகள் அச்சத்தில் உள்ளனர்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தை மறுசீரமைப்பு செய்ய பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





