• Thu. Sep 25th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

ஆலங்குளத்தில் இருந்து தேவர்குளம் வரை புதிய வழித்தடத்தில் அரசு பேருந்து

போக்குவரத்து துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் அவர்களின் உத்தரவின்படி, இன்று ஆலங்குளத்தில் இருந்து தேவர்குளம் வரை புதிய வழித்தடத்தில் செல்லும் பேருந்து இயக்கப்பட்டது. ஆலங்குளம் பேருந்து நிலையத்தில் வழித்தடத்தை மாவட்ட திமுக கழகச் செயலாளர் சிவபத்மநாதன் தலைமையில், திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் ஆகியோர் இந்த வழித்தடத்தை தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்துச்செல்வி, பார்வர்டு பிளாக் மாவட்ட செயலாளர் தங்கபாண்டியன், ஆலங்குளம் ஒன்றிய கழக செயலாளர் செல்லத்துரை, வடக்கு ஒன்றிய கழக செயலாளர் MPM அன்பழகன், மேலநீலிதநல்லூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் விஜயன், மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் மேகநாதன், சுப்பிரமணியன், தொழிலதிபர் மாரித்துரை, பேரூர் கழக செயலாளர் நெல்சன் தொமுச மாநில பொதுச் செயலாளர் தருமன் மண்டல செயலாளர் நெல்சன் போக்குவரத்து கிளை மேலாளர்கள் மற்றும்மாவட்ட இளைஞரணி சரவணன், மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் புனிதா ஒன்றிய அவைத் தலைவர் தளபதி முருகேசன்,,சங்கரன்கோவில் விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் அஜய் மகேஷ்குமார், வழக்கறிஞர் ஆலடி மானா, அலெக்ஸாண்டர், பாப்புலர் செல்லத்துரை, தொமுச முத்துக்குமார் தங்கவேலு முன்னாள் கவுன்சிலர் ஜெயலட்சுமி ,சதாசிவம் ரகுமான்,விஜயராஜ் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பொன் செல்வன், மாணவரணி துணை அமைப்பாளர் மாரியப்பன் மகளிர் தொண்டர் அணி துணை அமைப்பாளர் சரஸ்வதி,வழக்கறிஞர் சிவக்குமார், அலெக்ஸாண்டர், வீமராஜ் பசுபதி பாண்டியன் /பொன் மோகன்ராஜ் அன்பழகன், சங்கர்லால், நகர காங் தலைவர் தங்க செல்வம்,பந்தல் அருணாசலம், தட்டாப்பாறை கணபதி, மற்றும் வழக்கறிஞர் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்