• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

காரியாபட்டி அருகே அரசு பேருந்து கண்ணாடி உடைப்பு

ByBala

Apr 29, 2024

விருதுநகர் அருகே அரசுப்பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே துலுக்கன்குளம் பகுதியில் மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து காரியாபட்டி, மல்லாங்கிணறு வழியாக TN67N0932 எண் கொண்ட அரசு பேருந்து விருதுநகர் சென்று கொண்டிருந்தது. அப்போது. இருட்டில் மறைந்திருந்த மர்ம நபர் ஒருவர் அரசு பேருந்து மீது கல்வீசி முன்புறம் உள்ள கண்ணாடியை உடைத்து தப்பி சென்றுள்ளார். இதுதொடர்பாக பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் அளித்த புகாரின் பேரில் தலை மறைவான நபரை மல்லாங்கிணறு போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அரசுப்பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.