மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து சாரி புதுக்கோட்டை பகுதிக்கு ராஜேந்திரன் என்பவர் ஓட்டி வந்த அரசு பேருந்து மதுரை விமான நிலையம் செல்லும் சாலையில் உள்ள வெள்ளக்கல் பகுதியில் சாலை ஓரத்தில் இருந்த விவசாய பாசன கால்வாய் பகுதியில் பேருந்து நிலை தடுமாறி உள்ளே விழுந்ததால் பயணிகள் வெளியேற முடியாமல் அவதிக்குள்ளாளர்.

உடனடியாக அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் மற்றும் பேருந்து ஓட்டுனர் நடத்தினர் உதவியுடன் பேருந்தின் கடைசி இருக்கையின் ஜன்னல் கம்பிகளை அகற்றி உள்ளே இருந்த 15 க்கும் மேற்பட்ட பயணிகளை காயங்கள் இன்றி பத்திரமாக வெளியேற்றினர்.
இந்தத் தகவல் அறிந்து வந்த அவனியாபுரம் காவல் துறையினர் பொக்லைன் இயந்திரத்துடன் அரசு பேருந்தை மீட்டு மீண்டும் சாலையில் விட்டனர்.
மதுரை விமான நிலையம் செல்லும் சாலையில் அரசு பேருந்து நிலை தடுமாறி சாலை ஓரத்தில் உள்ள பாசன கால்வாய் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.




