மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் இறந்த நிலையில் அரசு பேருந்து நடத்துனர் சடலமாக மீட்டு, இது தற்கொலையா? என நாகமலை புதுக்கோட்டை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை நாகமலை புதுக்கோட்டை என்.ஜி.ஓ காலனி சேர்ந்தவர் சௌந்தர பாண்டியன் (வயது 52). இவர் உலகனேரி போக்குவரத்து பணிமனையில் நடத்துனராக வேலை செய்து வருகிறார்.
நேற்று இரவு பணியை முடித்துவிட்டு, நாகமலை புதுக்கோட்டை பகுதியில் உள்ள அவரது வீட்டில் இருந்து வெளியே சென்றதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு ரயில்வே தண்டவாளத்தில் சௌந்தர பாண்டி இறந்த நிலையில் கிடப்பதாக பகுதி மக்கள் ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற நாகமலை புதுக்கோட்டை காவல்துறையினர் விசாரணை செய்தது. மதுரை போடி ரயிலில் விபத்துக்குள்ளாகி இறந்திருப்பதாக தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து சௌந்தரபாண்டியன் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது ரயில் பாதையை கடக்கும்போது விபத்து ஏற்பட்டதா என்ற கோணத்தில் மதுரை ரயில்வே போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இறந்த சௌந்தர பாண்டியன் உடலை உடற்கூறு ஆய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.