பேஸ்புக்,வாட்ஸ்அப்பை தொடர்ந்து கூகுள் நிறுவனமும் ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிரபல சமூக வலைத்தள நிறுவனமான டுவிட்டர், மைக்ரோசாப்ட் நிறுவனமும் ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இதையடுத்து பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவற்றின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனத்தில் இருந்தும், 13 ஆயிரத்துக்கும் அதிகமான ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
இப்படி முக்கிய நிறுவனங்களில் 2022-ம் ஆண்டில் இதுவரை 1 லட்சத்து 35 ஆயிரம் ஊழியர்கள் பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கூகுள் நிறுவனம் தனது நிறுவனத்தில் பணியாற்றும் சுமார் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் கூகுள்
