• Sat. Dec 13th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

கண்டனூர் மக்களுக்கு ப.சிதம்பரம் சொன்ன நல்ல செய்தி!

By

Sep 12, 2021 ,

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கண்டனூரில் சுமார் 22 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்ட காதி வளாகம் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக செயல்படாததால் கட்டிடங்கள் அனைத்தும் சேதமடைந்தன.

இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பதவியேற்றவுடன் தமிழகத்தில் உள்ள மூடப்பட்ட காலி வளாகங்களை சீரமைக்க உத்தரவிட்டார்.

அதனடிப்படையில் ஆய்வு மேற்கொண்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், கண்டனூர் காலி வளாகம் 45 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள் செய்யப்பட்டு வருவதாகவும், அக்டோபர் 12 காந்தி ஜெயந்தியன்று திறக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். உடன் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி ஆகியோர் ஆய்வு நடத்தினர்.