தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தனது பிறந்த நாளை நேற்று புதுச்சேரியில் உள்ள தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடினார்.
இவருக்கு மாநிலம் முழுவதும் பல்வேறு விதமான கட்டவுட்கள் பேனர்கள் அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டு வானவேடிக்கை மேலதலத்துடன் பிறந்தநாள் விழாவை கொண்டாடினார்கள்.

மேலும் புதுச்சேரி மட்டும் இன்றி தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் புதுச்சேரியில் ஒரு சேர குவிந்து புஸ்சி ஆனந்திற்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் நேற்று தமிழக வெற்றிக்கழக பொதுச் செயலாளர் ஆனந்தன் பிறந்தநாளை முன்னிட்டு அரசு மருத்துவமனையில் பிறந்த 10க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தலா ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கி வழங்கினர்.

மேலும் பிறந்த குழந்தைகளுக்கு தேவையான சோப்பு பவுடர் எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்களையும் தாய்மார்களுக்கு தேவையான ஊட்டச்சத்து பொருட்களையும் அவர்கள் வழங்கினர்.
புஸ்ஸியானதின் பிறந்த நாளின் போது பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய சம்பவம் புதுச்சேரியில் நெகிழ்ச்சியை நிர்வாகிகள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது.