• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மீண்டும் அதிகரித்த தங்கம் விலை

By

Sep 15, 2021

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 அதிகரித்து சவரன் ரூ.35,728-க்கு விற்பனையாகிறது.
பெண்களை பொறுத்தளவில் தங்களது பணத்தை அதிகமாக தங்கத்தில் தான் முதலீடு செய்வது உண்டு. எனவே, தங்கம் விலையில் ஏற்படும் மாற்றங்களை பலரும் உற்று கவனிப்பதுண்டு. அதைபோல் தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து மற்றும் குறைந்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை சரிவை கண்டு வந்தது. ஆனால் இன்று சற்று உயர்ந்துள்ளது.
அதன்படி, இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 அதிகரித்து சவரன் ரூ.35,728-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.4,466-க்கு விற்பனை ஆகிறது. வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.67.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.