• Fri. Nov 14th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

சில வாரங்களுக்கு முன்பு பவுன் ரூ.36 ஆயிரத்தை தாண்டியது. அதன்பின் தங்கம் விலையில் பெரிய அளவில் குறைவு காணப்படவில்லை.

இதனால் பவுன் ரூ.36 ஆயிரத்துக்கு மேலே இருந்து வருகிறது. நேற்று பவுனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.36 ஆயிரத்து 152-க்கு விற்றது.இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை உயர்ந்தது. சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.36 ஆயிரத்து 472-க்கு விற்றது. கிராமுக்கு ரூ.40 அதிகரித்து ரூ.4 ஆயிரத்து 559 ஆக உள்ளது.

வெள்ளி கிலோவுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.66 ஆயிரத்து 700 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.66.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.