• Thu. Mar 19th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

விழா காலங்களில் உச்சத்தை தொடும் தங்கம் விலை…

Byகாயத்ரி

Oct 5, 2022

இந்தியாவில் விழா காலங்கள் ஆரம்பிக்கும் நிலையில் தங்கத்தின் தேவை அதிகரிக்க தொடங்கிவிட்டது. இதனால் அதன் விலையும் மீண்டும் உச்சத்தை தொட ஆரம்பித்துள்ளது. கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை சரிவை சந்தித்து வந்த நிலையில் கடந்த வாரத்தின் இறுதியில் இருந்து மீண்டும் தங்கம் விலை அதிகரிக்க தொடங்கியது. சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 70 அதிகரித்து ரூ.4775 என விற்பனையானது. சவரனுக்கு ரூபாய் 560 அதிகரித்தது. இதனால் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூபாய் 38,200 ஆக உயர்ந்தது. இந்நிலையில் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்றும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரப்படி ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ. 38,680க்கு விற்பனையாகி வருகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.4,835க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலை கடந்த 2 நாட்களில் ரூ.1,040 உயர்ந்துள்ளது.