• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

தொடர்ந்து எகிறும் தங்கம் விலை

Byவிஷா

May 8, 2025

தங்கம் விலை நேற்று ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்து சவரனுக்கு ரூ.1600 வரை அதிகரித்து, ஒரு சவரன் ரூ.72,800க்கு விற்பனையானது. இன்று கிராமுக்கு ரூ.55 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.73,040க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேசப் பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. கடந்த மாதம் 14-ம் தேதி ஒரு பவுன் ரூ.69,760-க்கு விற்பனையானது. பின்னர், படிப்படியாக அதிகரித்தது.
இந்நிலையில், நேற்று (மே.7) ஒரே நாளில் 2 முறை அதிகரித்து ‘ஷாக்’ கொடுத்தது. அதன்படி, நேற்று காலை ஒரு கிராம் தங்கம் ரூ.125 அதிகரித்து ரூ.9,025-க்கும், ஒரு பவுனுக்கு ரூ.1,000-ம் அதிகரித்து ரூ.72,200-க்கும் விற்பனையானது.
பின்னர், மதியம் மீண்டும் தங்கம் விலை உயர்ந்தது. அதன்படி, ஒரு கிராம் ரூ.75 அதிகரித்து ரூ.9,100-க்கும், ஒரு பவுன் ரூ.600 அதிகரித்து ரூ.72,800-க்கும் விற்பனையானது. அந்த வகையில் நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,600 அதிகரித்தது.
தொடர்ந்து இன்றும் தங்கம் விலை ஏற்றம் கண்டுள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.55 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,130-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.440 அதிகரித்து ஒரு பவுன் ரூ.73,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ஒரு கிராம் ரூ.110-க்கும், கிலோவுக்கு ரூ.1,000 குறைந்து ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
22 கேரட் ஆபரணத் தங்கம் கடந்த மே 2-ம் தேதி ஒரு பவுன் ரூ.70,040-க்கு விற்பனையான நிலையில், இன்று மே.8-ம் தேதி ஒரு பவுன் ரூ.73,040-க்கு விற்பனையாகிறது.