• Mon. Nov 3rd, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

தங்கத்தின் விலை புதிய உச்சம்

Byவிஷா

Jun 13, 2025

சென்னையில் இன்று தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ. 195 உயர்ந்து, ரூ.9,295க்கு விற்பனையாகிறது. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.1560 உயர்ந்து ரூ.74,360க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச பொருளாதார நிலைக்கு ஏற்ப தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. உலகப் பொருளாதாரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. கொரோனாவுக்கு பிறகு சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லாததால் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இதன் காரணமாகவும் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
அந்த வகையில் கடந்த ஏப்ரல் மாதம் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டது. அதன்பின்னர் ஏற்ற இறக்கமாகவே தங்கம் விலை காணப்படுகிறது. ஜூன் மாதம் தொடங்கியது முதலே தங்கம் விலை உயர்ந்து கொண்டே தான் வருகிறது..
அதன்படி சென்னையில் இன்று தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ. 195 உயர்ந்து, ரூ.9,295க்கு விற்பனையாகிறது. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.1560 உயர்ந்து ரூ.74,360க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே போல் வெள்ளியின் விலையும் இன்று உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.1 உயர்ந்து, ரூ.120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,20,000க்கு விற்பனையாகிறது.. தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால் நகைப்பிரியர்கள், சாமானிய மக்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.