தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.920 குறைந்து, ஒரு சவரன் தங்கம் விலை 72,120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலையானது ஏப்ரல் மாத தொடக்கம் முதலே ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. பல முறை புதிய உச்சத்தை தொட்டு வருவதால் நகைபிரியர்கள் அதிர்ச்சியடைந்து வருகின்றனர். தங்கம் விலை ஒரு கிராம் ரூ.6 ஆயிரம், ரூ.7 ஆயிரமே ஆச்சரியமாக பார்க்கப்பட்ட நிலையில், இந்த வருடத்துக்குள் ஒரு கிராமே ரூ.10 ஆயிரத்தை தொடும் என்று சொல்லப்படுகிறது. அந்த அளவுக்கு தினமும் தங்கம் விலை புதிய உச்சம் தொடுகிறது.
தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் விலையால் சாமானிய மக்கள் நகை வாங்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. தினசரி தங்கம் விலை உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இதற்கிடையே அமெரிக்கா அதிபராக டிரம்ப் பதவியேற்றது, உலகில் பல்வேறு இடங்களில் நடக்கும் போர் உள்ளிட்டவைகளால் தங்கம் விலை அதிகரித்து வருகிறது. சர்வதேச பொருளாதார சந்தைகளில் தங்கத்தின் விலை மாறிக் கொண்டே வருகிறது. இதன் விலை ஏறவும் செய்கிறது. இறங்கவும் செய்கிறது.
இதற்கிடையே மே 6 ஆம் தேதியான நேற்று இரண்டு முறை தங்கம் விலை உயர்ந்து நகைப்பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. காலையில் ஒரு கிராம் ரூ.9,025-க்கும், ஒரு சவரன் ரூ.72,200-க்கும் விற்பனையான நிலையில், மதியம் ஒரு கிராம் தங்கம் ரூ.9,100-க்கும், ஒரு சவரன் ரூ.72,800-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் மே 9 ஆம் தேதியான இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 920 ரூபாய் குறைந்தது. இதனால் 22 கேரட் தங்கம் ஒரு கிராம் 9,015 ரூபாய்க்கும், ஒரு சவரன் 72,120 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 4 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு 3000 ரூபாய் அதிகரித்த நிலையில் இன்று திடீரென சரிவை கண்டுள்ளது. வெள்ளி விலை ஒரு கிராம் 110 ரூபாயாகவும், ஒரு கிலோ 1,10,000 ரூபாயாகவும் உள்ளது.
தங்கம் விலை சவரனுக்கு ரூ.920 குறைவு
