• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தொடர்ந்து சரியும் தங்கம் விலை..!

Byவிஷா

Aug 17, 2022

தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த 3 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.500க்கு மேல் சரிந்துள்ளது. நடுத்தரக் குடும்பத்தினருக்கும், சாமானியர்களுக்கு தங்கம் வாங்க நல்ல வாய்ப்பாகும்.
தங்கம் விலை இன்று கிராம் ஒன்றுக்கு 6 ரூபாயும், சவரனுக்கு 48 ரூபாயும் விலை குறைந்துள்ளது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மாலை நிலவரப்படி கிராம் ரூ.4,855க்கும், சவரன் ரூ.38,840க்கும் விற்கப்பட்டது.
தங்கம் விலை இன்று காலை 2வது நாளாக மீண்டும் சரிந்துள்ளது. கிராம் ஒன்றுக்கு 6 ரூபாய் சரிந்து, ரூ.4,849 ஆகவும், சவரனுக்கு ரூ.48 குறைந்து, ரூ.38,792 ஆகவும் விற்கப்படுகிறது. கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.4849ஆக விற்கப்படுகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்து வருவது, டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் மதிப்பு வலுப்பெறுவது போன்றவை தங்கம் விலை குறைவுக்கான காரணங்களாகும். கடந்த இரு வாரங்களாகவே கடும் ஏற்ற, இறக்கத்துடனே இருந்த நிலையில், நீண்ட நாட்களுக்குப்பின் சவரன் ரூ.39ஆயிரத்தை கடந்தது. ஆனால், அடுத்த இரு நாட்களில் திடீர் சரிவு ஏற்பட்டு, மீண்டும் ரூ.38ஆயிரத்துக்குள் சரிந்தது.
இந்தவாரத்தில் நேற்று மட்டும் கிராமுக்கு 59 ரூபாய் குறைந்தது, இன்று மீண்டும் கிராமுக்கு 6ரூபாய் குறைந்துள்ளது. ஒட்டுமொத்தமாக இரு நாட்களில் கிராமுக்கு ரூ.65 குறைந்துள்ளது. சவரனுக்கு ரூ.520 சரிந்துள்ளது. இதனால் தங்கம் வாங்க நினைப்பவர்கள் விலைக் குறைவைப் பயன்படுத்தி வாங்குவது சிறந்தது என்று சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
வெள்ளி விலையும் இன்று சற்று குறைந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்று 10 பைசா குறைந்து, ரூ.63.30 ஆகவும், கிலோவுக்கு ரூ.100 குறைந்து ரூ.63,300க்கும் விற்கப்படுகிறது