• Sun. Nov 9th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம்..,

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில், மாமன்னர் ஒண்டிவீரனின் 254 வது நினைவு நாள் மற்றும் வீரமங்கை குயிலியின் 245வது நினைவு நாளை முன்னிட்டு வட்டார அருந்ததியர் சமுதாயம் சார்பில்  2-ம் ஆண்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் பூஞ்சிட்டு தேஞ்சிட்டு தட்டான் சிட்டு என மூன்று பிரிவுகளாக நடைபெற்றது. தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை, விருதுநகர், தேனி, கம்பம், ராமநாதபுரம்உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 138 ஜோடி மாடுகள் கலந்து கொண்டு வெற்றி இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்தன.

பூஞ்சிட்டு பந்தயத்திற்கு போகவர 5 மைல் தூரமும், தேன்சிட்டு பந்தயத்திற்கு போகவர 4 மைல் தூரமும் தட்டான் சிட்டு போட்டிக்கு போக வர 2 மயில் தூரமும் நிர்ணயிக்கப்பட்டு போட்டியானது நடைபெற்றது, மூன்று போட்டிகளும் 7 பிரிவுகளாக நடைபெற்றது, போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர் மற்றும் ஓட்டி வந்த சாரதிகளுக்கு விழாக்கமட்டியின் சார்பாக பரிசுத்தொகை சுழல் கோப்பை வழங்கி கௌரவிக்கப்பட்டது, 

போட்டியில் முதல் கொடி வாங்கிய சரதிகளுக்கு பரிசாக வெள்ளி மோதிரம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. தமிழக அளவில் நடைபெற்ற ஒரே இடத்தில் நடைபெற்ற பந்தயத்தில் 138 ஜோடி மாடுகள் கலந்து கொண்டது. இதுவே முதல் முறையாகும். மாட்டு வண்டி எல்கை பந்தயத்தினை சாலை நெடுகிலும் என்று ஏராளமான பந்தய ரசிகர்கள் கண்டு ரசித்தனர்.

மாட்டு வண்டிகள் பந்தயங்களை ஆதித்தமிழர் கட்சியின் நிறுவனத் தலைவர் ஜக்கையன், விளாத்திகுளம் முன்னாள் ஒன்றிய குழு தலைவரும் அதிமுக விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளருமான முனியசக்தி ராமச்சந்திரன், விளாத்திகுளம் அதிமுக தெற்கு ஒன்றிய கிழக்கு ஒன்றிய செயலாளருமான முனியசக்தி ராமச்சந்திரன், விளாத்திகுளம் அதிமுக தெற்கு ஒன்றிய செயலாளர் பால்ராஜ், விளாத்திகுளம் பேரூராட்சி சுகாதார மேற்பார்வையாளர் மீனாட்சி சுந்தரம், திமுகமேற்கு ஒன்றிய சமூக வலைதள அணி பொறுப்பாளர் வினோத் மீனாட்சி, ஊர் தலைவர் சண்முகவேல் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.