• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

திமுகவினரால் (GET OUT MODI) என்ற வாசகங்கள் பொருந்திய சுவரொட்டிகள்

ByKalamegam Viswanathan

Feb 21, 2025

மதுரை மாவட்டம் திருமங்கலம், திருப்பரங்குன்றம் பகுதிகள் முழுவதும் திமுகவினரால் (GET OUT MODI) என்ற வாசகங்கள் பொருந்திய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்தில் பல்வேறு அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஏன் முன்மொழி கல்வி அரசு பள்ளி மாணவர்கள் பயில கூடாது என்று கேள்வி எழுப்பினார். இந்த நிலையில் துணை முதலமைச்சர் உதயநிதிக்கும் அண்ணாமலைக்கும் வார்த்தை போரானது தொடங்கியது.

இந்த நிலையில் கடந்த தினங்களுக்கு முன்பு துணை முதலமைச்சர் உதயநிதி தமிழர்களின் உரிமைகளை பறிக்க முயன்றால் இந்த முறை கெட் அவுட் மோடி என்று தமிழர்கள் துரத்துவார்கள் என்றார் அதற்கு அடுத்த நாளை அண்ணாமலை உதயநிதி வீட்டு வாசல் முன்பு சுவரொட்டிகள் ஒட்டப்படும் என்றார் இந்த நிலையில் துணை முதல்வர் உதயநிதிக்கு அண்ணாமலைக்கும் வார்த்தை போரானது தொடர்ந்து வருகிறது.

அண்ணாமலை கெட் அவுட் மோடியா அல்லது கெட் அவுட் ஸ்டாலினா எது இணையத்தில் வைரலாகும் என்று சவால் விடுத்திருந்த நிலையில் பாஜகவினர் திமுகவினர் மாறி மாறி கெட் அவுட் மோடி கெட் அவுட் ஸ்டாலின் என்ற வாசகத்தை இணையத்தில் ரெண்டாக்கி வருகின்றனர் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டி வருகின்றனர் அந்த வகையில் திருமங்கலம் திருப்பரங்குன்றம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் கெட் அவுட் மோடி என்ற வாசகங்கள் பிரதமர் மோடி ஓடுவது போல் கார்ட்டூன் புகைப்படம் பொருந்திய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.