• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

சோழவந்தானில் பொது மருத்துவ முகாம்

ByKalamegam Viswanathan

Mar 9, 2025

சோழவந்தான் காமராஜர் நடுநிலைப் பள்ளியில் தமிழக முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம், சாஜர் அறக்கட்டளை, மதுரை ராக்ஸ் மருத்துவமனை இணைந்து பொது மருத்துவ முகாம் நடத்தினர்.
முகாமிற்கு சோழவந்தான் பேரூராட்சி தலைவர் எஸ்.எஸ்.கே.ஜெயராமன் தலைமையேற்று முகாமினை தொடங்கி வைத்தார். துணைத் தலைவர் லதாகண்ணன், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் வக்கீல் சத்திய பிரகாஷ், கவுன்சிலர் கொத்தாலம் என்ற செந்தில்வேல், மாவட்ட பிரதிநிதி பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர், முகாமில் மருத்துவ குழுவினர் இருதய வீக்கம், இருதய படபடப்பு சிகிச்சைகள், நுரையீரல் நிமோனியா, ஆஸ்துமா சிகிச்சைகள், கல்லீரல் கணையம் மற்றும் வைரஸ் சிகிச்சைகள், சர்க்கரை வியாதி நச்சுத்தன்மை சிகிச்சைகள், நாள்பட்ட இளைய மற்றும் மூச்சு திணறல் ஆகியவற்றிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. நோயாளிகளுக்கு இலவசமாக மருந்து மாத்திரை வழங்கப்பட்டது. முன்னதாக முகாம் மக்கள் தொடர்பு அலுவலர் கோட்டைச்சாமி வரவேற்றார். இம்முகாமில் 300-க்கும் மேற்பட்ட நோயாளிகள் பயனடைந்தனர்.