• Sat. Sep 12th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடை

Byவிஷா

Apr 14, 2025

1) ஆக்வா ரெஜியா என்ற திரவத்தில் கரைத்தால், தங்கம் கரைந்து விடும்.

2) பல்பில் உள்ள டங்ஸ்டன் இழை, சுமார் 3400 டிகிரி செல்சியஸ் வரை வெப்பத்தைத் தாங்கும் ஆற்றல் பெற்றது.

3) மாலத்தீவில் விளைகிற லொடாய்சியா என்ற இரட்டைப் பனங்கொட்டை தான், உலகிலேயே மிகப்பெரிய விதையாகும்.

4) நம்முடைய தலைமுடியில் இருந்து அமினோ அமிலம் தயாரிக்கப்படுகிறது. இது மருந்து மற்றும் ரசாயனப் பொருட்கள் தயாரிப்பில் உதவுகிறது.

5) ஐரோப்பாவில், மரங்களில் வாழும் தவளைகள் அதிகம். இவை குரங்குகளைப் போல ஒரு கிளையிலிருந்து மற்றொரு கிளைக்குத் தாவும்.

6) நெருப்புக்கோழி, தனது உணவைச் சேகரித்து வைப்பதற்காக சிறு சிறு கற்களை விழுங்கும். இது, மற்ற பறவையினங்களில் காணப்படாத வினோதமான செயல்.

7) நல்ல நிலையில் உள்ள மனிதரின் கண்கள், சுமார் ஒரு கோடிக்கும் மேற்பட்ட வண்ணங்களின் வேறுபாடுகளை அறியக்கூடியது.

8) பிரான்ஸ் நாட்டில் உள்ள பிரபலமான ஈபிள் கோபுரத்தை வடிவமைத்தவர், கஸ்டவ் ஈபிள். இவர்தான் அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலையை வடிவமைத்தவர்.

9) ஒரு மனிதனின் சராசரி உயரம், அவனுடைய தலையின் உயரத்தைப்போல் சுமார் ஏழரை மடங்கு இருக்கும்.

10) தந்தி அனுப்புவதற்கான சங்கேதக்குறியை, 1837-ம் ஆண்டு சாமுவேல் மோர்ஸ் என்ற அமெரிக்க அறிஞர் கண்டுபிடித்தார்.