• Fri. Dec 19th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Jul 14, 2023

1. e – PPS இன் விரிவாக்கம்? மின்னணு திட்ட முன்மொழிதல் அமைப்பு

2. ” மோனோலிசா ” வை வரைந்த ஓவியர்? லியோனார்டோ டாவின்சி

3. முதன் முதலில் இந்தியாவில் எங்கு பங்கு சந்தை ( STOCK EXCHANGE ) ஆரம்பிக்கப்பட்டது? மும்பை

4. பிரிட்டிஷ் பிரதமரின் இல்லத்தின் பெயர்? 10, டவுனிங் தெரு அரண்மனை

5. “கிவி” என்பது எதனுடைய வியாபாரப் பெயராகும்? ஷூ பாலிஷ்

6. ஒரு மைல் என்பது எத்தனை கிலோ மீட்டர்? 1.609 கி.மீ

7. சென்னை மாகாணம் எப்போது தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது? 1969

8. ” உலக அழகி ” ( MISS WORLD ) பட்டம் வென்ற இந்தியாவின் முதல் பெண்? ரீட்டா பரியா

9. உலகின் மிகப்பெரிய பணக்காரர் என்ற சிறப்பை 2013 ஆம் ஆண்டில் பெற்றவர்? கார்லோஸ் ஸ்லிம் ஹேலு, மெக்சிகோ

10. கை விளக்கு ஏந்திய காரிகையார் என்று அழைக்கப்பட்டவர்? பிளாரன்ஸ் நைட்டிங்கேல்