• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Mar 8, 2023

1.”திருமுருகாற்றுப்படை” எனும் நூலின் ஆசிரியர்?
நக்கீரர்

2.அகத்தியர் சைவ சமயக் குரவர்கள் கூட்டதில் சேராதவர். சரியா? தவறா?
சரி

3.தைத் திங்கள் முதல் நாள் கொண்டாடப்படும் விழா?
பொங்கல்

4.பரணர் எம்மன்னனின் சம காலத்தவர்?
கரிகாலன்

5.பொய்கையார் இயற்றிய இலக்கியம்?
களவழி நாற்பது

6.வாகைப் பரந்தலை போரை நடத்திய மன்னன்?
கரிகாலன்
7.முதல் சங்கத்தைத் தோற்றுவித்த மன்னன்?
காய்ச்சின வழுதி

8.பல்யானை செங்குட்டுவன் தந்தை?
உதயஞ்சேரலாதன்

9.கரூரைத் தலைநகராகக் கொண்ட மன்னர் பிரிவு?
இரும்பொறை பிரிவு

10.தகடூரை ஆண்ட அதியமானை வென்ற சேரன்?
பெருஞ்சேரல் இரும்பொறை