• Sat. Dec 20th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Jul 16, 2023

1.தாஜ்மஹால் கட்ட எத்தனை ஆண்டுகள் ஆனது?

20 வருடங்கள்

2.ஒரு தேன்கூட்டில் இருக்கும் இராணி தேனீயின் எண்ணிக்கை

ஒன்று

3.அறுவைச் சிகிச்சையில் உடலின் உள்ளே உள்ள பாகங்களைத் தைப்பதற்குப் பயன்படுவது

பட்டு நாண்

4.ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் யார்?

கர்ணம் மல்லேஸ்வரி

5.சர்வதேச தொண்டு தினமாக எந்த நாள் கொண்டாடப்படுகிறது?

5 செப்டம்பர்

6.அதிக நாடுகளைக் கொண்ட கண்டம் எது?

ஆப்பிரிக்கா

7.தேசிய நெடுஞ்சாலைகளை நிர்வகிப்பது

மத்திய அரசு

8.உலகின் மிகப்பெரிய கண்டம் எது?

ஆசியா

9.பருப்பு வகைகள் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம்

மத்தியப்பிரதேசம்

10.உலகின் மிக நீளமான நதி எது?

நைல்