மதுரை ஆரப்பாளையம் அருகே உள்ள நியூமா அறக்கட்டளையில், தி அமெரிக்கன் கல்லூரி சமூகப்பணித்துறை முதலாம் ஆண்டு முதுநிலை மாணவர்கள் சார்பில், பாலின சமத்துவம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி (ஜன.09) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தி அமெரிக்கன் கல்லூரியின் சமூகப் பணித்துறை பேராசிரியர் சுனிதா ஈவ்லின் கிறிஸ்டி சிறப்பு விருந்தினராக பங்கேற்று, போட்டியில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்குப் பரிசுப் பொருட்கள் வழங்கினார். மேலும் நிகழ்ச்சியை மெலோனி இன்ஃபான்டா, நிர்வாகிகள், மாணவர்கள் சிறப்பாக ஏற்பாடுகள் செய்திருந்தனர்.