• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

கீழமாத்தூர் அருள்மிகு உமாமகேஸ்வரி மணிகண்டேஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேக விழா.., திரளான பக்தர்கள் பங்கேற்பு…

ByKalamegam Viswanathan

Jan 21, 2024

மதுரை மாவட்டம் கீழமாத்தூரில் அமைந்துள்ள அருள்மிகு உமாமகேஸ்வரி மணிகண்டேஸ்வரர் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, கடந்த 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை கிராம தெய்வங்களுக்கு ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து அனுக்ஞை விக்னேஸ்வர பூஜை வாஸ்து சாந்தி திக் பலி ரக்க்ஷாபந்தன் கும்பலங்காரம் வேத பாராயணம் முதல் நாள் யாக வேள்வி நடைபெற்றது. தொடர்ந்து நேற்று காலை இரண்டாம் கால யாகசாலை பூஜையும், அதனைத் தொடர்ந்து மாலை மூன்றாம் காலயாக பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து இன்று காலை 6 மணி அளவில் நான்காம் காலயாக பூஜை ஆரம்பிக்கப்பட்டு, காலை 9 மணிக்கு அருள்மிகு ஸ்ரீ உமாமகேஸ்வரி சமேத மணிகண்டேஸ்வரர், அருள்மிகு ஸ்ரீதேவி, பூதேவி சமேத சுந்தர மாணிக்க பெருமாள், அருள்மிகு ஸ்ரீ ஜெய வீர ஆஞ்சநேயர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக ஏற்பாடுகளை தக்கார் சங்கரேஸ்வரி செயல் அலுவலர் இளமதி மற்றும் பணியாளர்கள் உபயதாரர்கள் பாலாஜி விவேகானந்தா உள்பட கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.