மதுரை மாநகர் எல்லிஸ்நகர் பகுதியை சேர்ந்த பயாஸ் என்பவர் கேஸ் சிலிண்டர் மற்றும் பெட்ரோல் மூலமாக இயங்கும் ஆம்னி வாகனத்தை பயன்படுத்திவந்துள்ளார்.

இன்று மதியம் தனது ஆம்னி காரில் உள்ள மதுரை எல்லீஸ் நகர் 70 அடி சாலையில் சிலிண்டரில் கேஸ் நிரப்பிய பின்னர் சிறிது நேரம் கழித்து மதுரை பைபாஸ் சாலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம் எதிரே உள்ள உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் பெட்ரோல் போட்டுவிட்டு வீடு திரும்பியுள்ளார். பெட்ரோல் போட்டு சில நிமிடங்களிலே
அப்போது சாலை முத்து நகர் பகுதியில் சாலையில் தனது வாகனத்தை பயாஸ் இயக்கிசென்றபோது திடிரென காரில் இருந்து வெடிக்கும் சத்தம் கேட்டுள்ளது.

இதையடுத்து காரில் இருந்து கீழே இறங்கி பார்த்தபோது காரில் தீ பிடிக்க தொடங்கியுள்ளது.
இதனால் பதற்றமடைந்த பயாஸ் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார்.
பின்னர் இடத்திற்கு விரைந்து வந்த நிலைய அலுவலர் சுரேஷ் கண்ணா மதுரை டவுன் தீயணைப்புத்துறையினர் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போராடி தண்ணீரை பீய்ச்சியடித்தை தீயை அணைத்தனர்.
காரில் உள்ள சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தால் ஆம்னி கார் முழுவதுமாக எரிந்து கருகி சேதமடைந்தது.
தீ விபத்து குறித்து குறித்து எஸ்.எஸ்.காலனி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.





