• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

செல்போன்களை திருடிய கும்பல்..,

ByPrabhu Sekar

Jul 29, 2025

தாம்பரம் பேருந்து நிலையத்திலிருந்து பூந்தமல்லிக்கு செல்லும் 66 தடம் கொண்ட அரசு பேருந்தில் பயணித்த முருகன் என்பவரின் செல்போன் காணாமல் போனது .

உடனே முருகன் தாம்பரம் காவல் நிலையத்திற்கு சென்று உதவி ஆணையாளர் நெல்சன் அவர்களிடம் பேருந்தில் பயணித்த போது தனது செல்போன் காணவில்லை என காலை 9 மணி அளவில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் உடனடியாக உதவி ஆணையாளர் நெல்சன் தாம்பரம் பேருந்து நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை பார்வையிட்டபோது ஒரு கும்பல் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளிடமிருந்து செல்போன்களை திருடி செல்வது பதிவாகி இருந்தது.

அதுமட்டுமில்லாமல் பேருந்து படிக்கட்டில் ஆண் பயணிகள் ஏறும் போது மேல் சட்டையில் வைத்திருக்கும் செல்போன்களை காகித செய்தித்தாளை கொண்டு மேல் சட்டையில் வைத்திருக்கும் செல்போன் மீது வைத்து திருடி சென்றது பதிவாகி இருந்தது.

அதுமட்டுமில்லாமல் திருடன் செல்போன்களை உடனடியாக அலுமினியம் பாயில் அதாவது (கிரில் சிக்கன்களை மடிக்கும்) காகிதத்தில் சுருட்டி பாக்கெட்டில் வைத்துக் கொண்டு செல்வதும் பதிவாகி இருந்தது.

இந்த காகித பேப்பரில் செல்போனை சுருட்டி வைத்தால் அடுத்த நொடியே செல்போன்களின் டவர்கள் துண்டிக்கப்படும் எனவும் தெரியவந்துள்ளது.

இதைப் பார்த்த போலீசார் உடனே தாம்பரம் பேருந்து நிலையத்தில் செல்போன்கள் திருடிய நபர்களை தேடிவந்தனர்.

அப்பொழுது செல்போன்களை திருடிய திருடர்கள் பூந்தமல்லிக்கு செல்லும் 66 தடம் எண் கொண்ட பேருந்தில் ஏறி தப்பிச் செல்ல முயன்று உள்ளனர்.

இதனைப் பார்த்த‌ பால்ராஜ் என்ற காவலர் உடனடியாக அதே பேருந்தில் ஏறி பேருந்தை ஓட்டிய ஓட்டுநரிடம் தான் போலீஸ் என்றும் செல்போன்களை திருடிய நபர்கள் பேருந்துக்கு உள்ளே இருப்பதால் பேருந்தின் கதவை தான் சொல்லும் வரை திறக்க கூடாது என தெரிவித்ததோடு உடனடியாக உதவி ஆணையாளருக்கு தகவல் தெரிவித்து உள்ளார்.

அங்கு வந்த காவலர்கள் பேருந்து உள்ளே இருந்த செல்போன் திருடர்களை கைது செய்து தாம்பரம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் செல்போன்களை திருடியவர்கள்
ஆந்திரா மாநிலத்தைச் சார்ந்த சங்கர் பத்ரோ, அஜய், இம்மானுவேல்,
வெங்கடேஷ், ஜெகன் மற்றும் சென்னை வெங்கம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்பது தெரியவந்துள்ளது.

குறிப்பாக இவர்கள் தாம்பரம் எக்மோர் சென்ட்ரல் பேருந்து நிலையம் அதேபோன்று ரயில் நிலையம் பகுதிகளில் கூட்டமாக செல்லும் நபர்களை குறிவைத்து செல்போன்களை திருடியது தெரியவந்தது.

திருடி செல்போன்களை உடனடியாக ஆந்திர மாநிலத்திற்கு எடுத்து சென்று விற்று அதனை அனைவரும் சமமாக பிரித்து கொள்வார்கள். இவர்கள் மீது சென்டரல் எக்மோர் அதேபோன்று ஆந்திரா ஆகிய பகுதிகளில் வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது..