கரூரை அடுத்த செம்மடையில் கரூர் மாவட்ட மண்பாண்ட தொழிலாளர் நல சங்கத்தின் சார்பில் விநாயகர் சிலை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அரை அடி முதல் 10 அடி உயரம் வரை சிலைகள் செய்யப்பட்டு 100 ரூபாய் முதல் 20 ஆயிரம் வரை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
களிமண், காகித கூல் மற்றும் குச்சி கிழங்கு மாவு, இயற்கை வண்ணங்களை கொண்டு அரசின் விதிகளுக்கு உட்பட்டு விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
புலி, யானை, எலி உள்ளிட்ட விலங்கினங்கள் மீது விநாயகர் அமர்ந்திருப்பது போன்றும் பலவகையான வடிவங்களில் விநாயகர் சிலைகள் செய்யப்பட்டுள்ளன.

இதில் குறிப்பாக ராயில் என்பீல்ட் புல்லட்டில் விநாயகர் அமர்ந்திருப்பது போன்ற விநாயகர் சிலை, சிக்ஸ் பேக் விநாயகர், ராஜ கணபதி விநாயகர் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் உள்ளது
இது பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
இதனை பலரும் விரும்பி அதனை புக் செய்து சென்றுள்ளதாகவும், அதற்கு அடுத்தபடியாக கல்சிலை போன்று செய்யப்பட்ட விநாயகர் சிலையை பொதுமக்கள் வாங்கிச் செல்வதாக தெரிவித்தார்.