மதுரை பழைய கீழ் மதுரை ஸ்டேஷன் ரோடு காமராஜபுரம் வடக்கு தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ வர சக்தி விநாயகர் ஜெயவீர ஆஞ்சநேயர் தட்சிணாமூர்த்தி சமயபுரத்து அம்மன் திருக்கோவில் 36 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா கடந்த புதன்கிழமை கணபதி ஹோமம் நிகழ்வுடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து வருடாபிஷேகம் நடைபெற்றது.
4 நாள் நடைபெறும் இந்நிகழ்வில் இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக முளைப்பாரி எடுத்து வைகை ஆற்றின் கரைக்கும் நிகழ்வில் பகுதி பெண்கள் திரளாக கலந்து கொண்டு வளர்த்த முளைப்பாரிகளை தலையில் சுமந்து ஊர்வலமாக சென்று வைகை ஆற்றில் கரைத்தனர்.

தொடர்ந்து கோவில் முன்பு உலக நன்மை வேண்டியும் மழை பெய்ய வேண்டியும் விவசாயம் செழிக்கவும்108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெண்கள் கலந்துகொண்டு திருவிளக்கு ஏற்றி சுவாமியை தரிசனம் செய்தனர்.
நிறைவு நாளாக மாபெரும் அன்னதானம் நடைபெற்றது.
இவ்விழாவில் காமராஜபுரம் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகள் சேர்ந்த பொதுமக்கள் ஏராளமான ஒரு கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை தலைவர் பாண்டி செயலாளர் கணேசன் பொருளாளர் கலையரசன் ஆகியோர் தலைமையில் கோவில் நிர்வாகிகள் திருப்பணி குழுவினர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.













; ?>)
; ?>)
; ?>)