• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

‘கேம் சேஞ்சர்’ பட டீசர் வெளியீடு

Byஜெ.துரை

Nov 11, 2024

குளோபல் ஸ்டார் ராம் சரண், பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் மற்றும் தில் ராஜுவின் ‘கேம் சேஞ்சர்’ பட டீசர் வெளியீடு!

குளோபல் ஸ்டார் ராம் சரண், பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர்  கூட்டணியில் ‘கேம் சேஞ்சர்’ படத்தின் டீசர், லக்னோவில் பெரும் ஆரவாரம் மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியிடப்பட்டது. 

‘கேம் சேஞ்சர்’ படத்தின் டீசர், அதிரடி விஷுவல் மற்றும் கலக்கலான ஸ்டைலில்  ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த டீசரில் ராம் சரண் சக்திவாய்ந்த ஐஏஎஸ் அதிகாரி மற்றும் சமூகத்திற்காக ஏதாவது செய்ய விரும்பும் உற்சாகமான இளைஞன் என இரட்டை வேடத்தில் கலக்குகிறார்.

ஒரு நிமிடம் 30 வினாடிகள் கொண்ட டீசர்,படத்தின் அரசியல் பின்னணி, கதைக்களத்தின் மையத்தை அறிமுகப்படுத்துவதுடன், படம் பற்றிய ஆவலை அதிகரிக்கிறது.

பிரம்மாண்ட ப்ளாக்பஸ்டர் படங்களுக்குப் பெயர் பெற்ற இயக்குநர் ஷங்கரின் முத்திரை, ஒவ்வொரு ஃப்ரேமிலும் தெரிகிறது.

கண்கவர் ஃப்ரேம்கள்,அதிரடி ஆக்சன்,மனம் மயக்கும் இசை என டீசர் படம் முழுமையான  என்டர்டெய்னராக இருக்குமென்பதை உறுதி செய்கிறது.

இயக்குநர் ஷங்கர் நடிகர் ராம் சரணை, இதுவரை இல்லாத அளவில் வெகு ஸ்டைலீஷாக காட்சிப்படுத்தியுள்ளார்.

ஒருபுறம் படம் அதிரடி ஆக்‌ஷன் திரில்லராகத் தோன்றினாலும், மறுபுறம், இது பார்வையாளர்களுக்கு ஒரு சிறந்த சினிமா அனுபவமாக இருக்கும் என்பதை டீசர் உறுதியளிக்கிறது.  எஸ்.திருநாவுக்கரசுவின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது,  அதே வேளையில் எஸ்.தமனின் அட்டகாச இசை உணர்வுப்பூர்வமான நம்மைத் தாக்குகிறது. நடிகை கியாரா அத்வானி, எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரக்கனி, அஞ்சலி, நவீன் சந்திரா, சுனில் மற்றும் ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களின் பங்களிப்பில், ‘கேம் சேஞ்சர்’ ஒரு அசத்தலான என்டர்டெய்னராக இருக்கும்.