காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு குடும்பங்களுக்கு பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச கேஸ் இணைப்பு மற்றும் மாநில அரசு திட்டங்களான முதியோர் உதவித்தொகை, சிவப்பு நிற ரேஷன் அட்டை மாற்றம், மகளிர் காண ஊக்கத்தொகை, கணவனால் கைவிடப்பட்டோர் மற்றும் விதவைகள் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை தொகுதி மக்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் ஜி.என்.எஸ.ராஜசேகரன் பயனாளிகளை கண்டறிந்து தகுதி வாய்ந்தவர்களுக்கு வழங்கி வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக இன்று திருநள்ளாறு தொகுதிக்கு உட்பட்ட 100க்கும் மேற்பட்ட முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான அடையாள அட்டைகளையும் பத்துக்கும் மேற்பட்டோருக்கு மஞ்சள் நிற ரேஷன் அட்டையில் இருந்து சிவப்பு நிற ரேஷன் அட்டையாக மாற்றி பயனாளிகளிடம் ஒப்படைத்தார். நிகழ்ச்சியில் திருநள்ளாறு தொகுதி பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அப்பகுதி பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானார் கலந்து கொண்டனர்.