• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பிரதமர் தாயார் மறைவு பிரார்த்தனை
அரசியல் தலைவர்கள் பங்கேற்பு

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென், முதுமை காரணமாக கடந்த 30-ம் தேதி மரணமடைந்தார்.
பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென், முதுமை காரணமாக கடந்த 30-ம் தேதி மரணமடைந்தார். அவரது உடல் காந்திநகரில் தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிரதமர் மோடி பிறந்த வேத்நகரில் அவரது தாய்க்கு நேற்று நினைவு பிரார்த்தனை நடந்தது. அங்குள்ள ஜவஹர் நவோதய் வித்யாலய் அரங்கில் காலை 9 மணி முதல் 12 மணி வரை இந்த பிரார்த்தனை நடந்தது. இதில் பிரதமர் மோடியின் குடும்பத்தினர், நலம் விரும்பிகள் மற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த அரசியல் தலைவர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். குறிப்பாக, குஜராத் சட்டசபை சபாநாயகர் சங்கர் சவுத்ரி, மத்திய அமைச்சர் பர்சோத்தம் ருபாலா, மாநில முன்னாள் துணை முதல்வர் நிதின் படேல், எம்.எல்.ஏ.க்கள் பர்னேஷ் மோடி, ஜேதா பர்வாத் என ஏராளமான தலைவர்கள் கலந்து கொண்டனர். இதைப்போல பா.ஜனதா தலைவர் சஞ்சய் ஜோஷி, முன்னாள் சபாநாயகர் நிமா ஆச்சார்யா என ஏராளமான நிர்வாகிகளும் இந்த பிரார்த்தனையில் பங்கேற்று தங்கள் அஞ்சலியை செலுத்தினர்.