• Mon. Mar 16th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

காவலர் மீது பேருந்து மோதிய பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்

ByA.Tamilselvan

Jun 18, 2022

ராஜபாளையம் போக்குவரத்துக் காவலர் சுரேஷ் பழைய பேருந்து நிலையம் அருகே பணியாற்றிக் கொண்டிருந்தபோது தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது…
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வன்னியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவர் ராஜபாளையம் நகர் போக்குவரத்து காவலராக பணிபுரிந்து வருகிறார்.இவர் வழக்கம்போல் ராஜபாளையம் பழைய பேருந்து நிலையத்தில் போக்குவரத்து சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த தனியார் பேருந்து போக்குவரத்து காவலர் சுரேஷின் பின்னால் மோதியதில் தலைகுப்புற கவிழ்ந்து படுகாயமடைந்தார். பின்னர் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தற்போது அவர் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜபாளையம் பகுதியில் சாலைப் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதாகவும், இதனால் வாகனங்கள் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி செல்வதாக குற்றச் சாட்டு எழுந்துள்ளது. மேலும் இதுபோன்று இப்பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாகவும் சாலை பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அதுமட்டுமின்றி தனியார் வாகனங்கள் வேகமாக செல்வதை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.