தேனி மாவட்டம் சின்னமனூரில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோவில்கள் சார்பாக 18 ஜோடிகளுக்கு 34 சீர் வரிசைகளுடன்
இலவச திருமண விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

தேனி மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் உள்ள சின்னமனூர் சிவகாமி அம்மன் திருக்கோவிலில் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி 18 ஜோடிகளுக்கு இலவச திருமண விழா நடைபெற்றது..
இவ்விழாவிற்கு கம்பம் எம்.எல்.ஏ ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
இந்து சமய அறநிலையத்துறை மாவட்ட உதவி ஆணையர் ஜெயதேவி முன்னிலை வகித்தார். திருமண விழாவில் மணமக்கள் கோவில் மண்டபத்தில் அமர வைத்து யாக குண்டங்கள் அமைத்து சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மணமக்களுக்கு அவர்களின் தாய் மாமன்கள் மாலை அணிவித்து மரியாதை செய்து இந்து சமுதாய முறைப்படி சின்னமனூர் சிவகாமி அம்மன் கோவில் அர்ச்சகர் பாலசுப்ரமணிய பட்டர் தலைமையில் தமிழில் வேத மந்திரங்கள் முழங்க
விசேஷ பூஜைகளை நடத்தி மாங்கல்ய தானம் செய்து திருமண திருமண விழா நடைபெற்றது .

விழாவில் கலந்து கொண்ட திருமண ஜோடிகளுக்கு திருமண சான்றிதழ்களை வழங்கியதுடன், நான்கு கிராம் தங்க மாங்கல்யம், குத்துவிளக்கு, கட்டில், மெத்தை, பீரோ, மிக்ஸி, உள்ளிட்ட 34 சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது. விழாவில் சின்னமனூர் நகர்மன்ற தலைவர் அய்யம்மாள், திருமண தம்பதிகளின் பெற்றோர்கள் உறவினர்கள் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.