

வியாபாரிகள் சங்கம் சார்பாக பொது மக்களுக்கு இலவச நீர் மோர் வழங்கப்பட்டது.
சென்னை வடபழனி நான்கு முனை சிக்னல் சந்திப்பில் ஆடி கிருத்திகை முன்னிட்டு சைதாப் பேட்ரோடு வட்டார வியாபாரிகள் சங்கம் மற்றும் வடபழனி போக்குவரத்து காவல்துறை ஒத்துழைப்போடு பொதுமக்களுக்கு கோடை வெப்பத்தின் தாகம் தணிக்க நீர் மோர் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக தமிழ் நாடு வணிகர் சங்க பேரமைப்பு மண்டலத்தலைவர் K.ஜோதியார், மாவட்ட செயலாளர் M.R.பன்னீர்செல்வம், மேற்கு மாவட்ட செயலாளர் என்.பி.பாலன், மாவட்ட செய்தி தொடர்பாளர் பாண்டியராஜன், வட்டார வியாபாரிகள் சங்க பொருளாளர் லயன் தா.ரங்கன், கவுரத்தலைவர் லயன் டாகடர் S.ஜாகீர்உசேன், தொகுதி செயலாளர் ஞானம், கணேசன், பால்ராஜ், பழனியப்பன் , மற்றும் வணிகர் சங்க மாநில மாவட்ட நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


