மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் குறிஞ்சி வட்டார களஞ்சியமும் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்க நிதி உதவியுடன் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து கொண்டையம்பட்டி நாகப்பா நர்சரி பள்ளியில் கண் மருத்துவ முகாம் நடை
பெற்றது.
மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர்கள் ஷோபனா, கரிஷ்மாரெட்டி,
முகாம் ஒருங்கிணைப்பாளர் முருகேசன், மதுரை கிராமப்புற மண்டல ஒருங்கிணைப்பாளர் முத்தையா, வட்டார தலைவி ஜெயலட்சுமி, மற்றும் வட்டார பணியாளர்கள் கலந்து கொண்டனர். மொத்தம் 150 பேர் கலந்து கொண்டனர்.
42 பேர் கண் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர். கண் கண்ணாடி 13
பேர் பெற்றுள்ளனர். முகாம் சிறப்பாக நடைபெற்றது. முகாமை, வட்டார ஒருங்கிணைப்பாளர் நாகரெத்தினம் மற்றும் பணியாளர்கள் தலைவிகள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்னர்.
கொண்டையம்பட்டி ஊராட்சியில், இலவச மருத்துவ முகாம்
