பல்லாவரத்தில் ஐ சி எம் ஜெப வீடு சார்பில் நடைபெற்ற இலவச பொது மருத்துவ முகாமில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரத்தில் உள்ள ஐ சி எம் ஜெப வீடு சார்பில் கிறிஸ்மஸ் பண்டிகை முன்னிட்டு இலவச மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற்றது.
மருத்துவ முகாமிற்கு பாஸ்டர் ஜெயராஜ் தலைமையில் பாஸ்டர் கிரேஸ் ஜெயராஜ் ஏற்பாட்டில் நடைபெற்றது இந்த முகாமினை அப்போஸ்தலர் டி.எஸ்.ஜெயா தங்கராஜ் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். இந்த மருத்துவ முகாமில் பாரத் மருத்துவமனை சார்பில் சர்க்கரை இரத்த பரிசோதனை, பொது மருத்துவம் ஆகியவை பார்க்கப்பட்டு பொதுமக்களுக்கு இலவச மருந்து மற்றும் மாத்திரை வழங்கப்பட்டன.

மேலும் கண் மருத்துவர்கள் சார்பில் கண் பார்வை குறைபாடு, மாலைக்கண், விழித்திரை பாதிப்பு, கிட்டப்பார்வை, தூரப்பார்வை, ஆகிய பாதிப்புகளுக்கு இலவசமாக பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து கண் கண்ணாடி அணிய மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட நபர்களுக்கு இலவசமாக கண் கண்ணாடி வழங்கப்பட்டது. இலவச பொது மற்றும் கண் சிகிச்சை மருத்து முகாமில் ஐ சிம் திருச்சபை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் என 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் பாரத் கல்லூரி சார்பில் ஒருங்கிணைப்பாளர் வேதமுத்து, ஐ.சி.எம் திருச்சபை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்




