காரியாபட்டியில் நூற்பாலை தொழிலாளர்களுக்கான இலவச மருத்துவமுகாம் நடை பெற்றது. விருதுநகர் மாவட்டம் ஸ்பீச் நிறுவனம், மற்றும் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை சார்பில், காரியாபட்டி அருகேயுள்ள தனியார் நுற்பாலையில் தொழிலாளர்களுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் வட மாநில தொழிலாளர்கள் உட்பட 180-க்கும் மேற்பட்ட தொழிலளர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர். முகாமில் இரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, கண் பரிசோதனை, இ.சி.ஜி மற்றும் பொது பரிசோதனை செய்யப்பட்டது. முகாமினை ஸ்பீச் திட்ட மேலாளர் சுரேந்தர் தலைமையிலான பணியாளர் குழுவினர் ஒருங்கிணைப்பு செய்திருந்தனர்.








